திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 21 மே 2022 (16:10 IST)

உக்ரைன் மாணவர்களுக்கு மருத்துவ சீட் ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

உக்ரைன் மாணவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில் உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர் படையெடுத்துப் போர் தொடுத்து வருகின்றனர்.

போர் ஆரம்பக்கட்டத்தில் இருந்த போது, உக்ரைனில் இருந்து, இந்திய மாணவர்கள் மற்றும் மக்களை இந்திய அரசு விமானத்தில் பத்திரமாக அழைத்து வந்தது.

இதில், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களுக்கு சீட் வழங்குவது குறித்து இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதில், உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மருத்துவ  மாணவர்கள் இங்கு மருத்துவப் படிப்பு தொடர முடியாது; அந்த  மாணவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையிலுள்ளது, மாநில அரசிற்கு அது சாத்தியமில்லை  எனத் தெரிவித்துள்ளார்