அன்பு மாமாவுக்கு நன்றி: திமுக பொதுக்குழுவில் முதல்முறையாக பேசிய உதயநிதி

Udhayanidhi stalin
திமுக பொதுக்குழுவில் முதல்முறையாக பேசிய உதயநிதி
siva| Last Updated: புதன், 9 செப்டம்பர் 2020 (12:37 IST)
திமுக பொதுக்குழு இன்று காணொளி மூலம் கூடிய நிலையில் இன்றைய பொதுக்குழுவில் முதல்முறையாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்
இன்று திமுக பொதுக்குழு கூடியவுடன் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் மற்றும் டிஆர் பாலு ஆகிய இருவரும் தங்களுக்கான பதவியை ஏற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து துணை பொதுச் செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் நியமிக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதனை அடுத்து புதிய பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன

இந்த நிலையில் திமுக பொதுக்குழுவில் முதல்முறையாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசி உள்ளார். அவர் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது ’அன்பு மாமா துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரை வாழ்த்த வயது எனக்கு இல்லை. ஆனால் அதே நேரத்தில் பொதுக்குழுவில் பேச எனக்கு அனுமதி பெற்று தந்த அன்பு மாமா துரைமுருகன் அவர்களுக்கு நன்றி’ என்று உதயநிதி பேசி உள்ளார். உதயநிதியின் இந்த கன்னிப் பேச்சை அனைவரும் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :