வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (17:15 IST)

ஜாபர் சாதிக்கின் குடோனிற்கு சீல்..! முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்.!!

Jafar Sadiq
சோதனை நிறைவு பெற்றதை அடுத்து, ஜாபர் சாதிக் குடோனிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
 
போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.  

ஜாபர் சாதிக்கின் நண்பரான சதா, இந்த குடோன்களில் இருந்து போதைப்பொருளை மசாலா உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து அனுப்பி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து, சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக்கின் குடோனில் 5-க்கும் மேற்பட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


வீட்டை குடோன் போல நடத்தி வந்த நிலையில்,  வீட்டின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடோனில் இருந்து போதைப் பொருளை எடை போடும் மிஷின், பேக்கிங் மிஷின், புகைப்படங்கள் சிலவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.  சோதனை நிறைவு பெற்றதை அடுத்து, அந்த குடோனிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.