யூடியூபர் டிடிஎஃப். வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி
யூடியூபர் டிடிஎஃப். வாசன் இன்று இரண்டாவது முறையாக அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், இதை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17 ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்
இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 19 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு கடந்த 21 ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், இதை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.