ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (15:13 IST)

சென்னை நிறுவனத்தின் ரூ.125 கோடி சொத்தை முடக்கியது அமலாக்கத்துறை.. அதிரடி நடவடிக்கை..!

சென்னையை சேர்ந்த யூனிட்டெக் குழும நிறுவனத்துக்குத் தொடர்புடைய யுனிவேல்டு சிட்டி நலம்பாக்கம் என்ற பகுதியில்  ரூ.125 கோடி மதிப்புள்ள 4.79 ஏக்கர் நிலத்தில் 39.83% சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2018ம் ஆண்டு யூனிட்டெக் குழும நிறுவனங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து இதுவரை ரூ.257.61 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
 
ரூ.6,452 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக யூனிட் டெக் நிறுவனத்தின் நிர்வாகிகள் சஞ்சய் சந்திரா அஜய் சந்திரா ரமேஷ் சந்திரா ப்ரீத்தி சந்திரா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva