தொடர்புடைய செய்திகள்
- மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி கொடுத்துள்ளது.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...!
- மானிய விலையில் இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே.. மத்திய அரசின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி...!
- ஒரே மாதத்தில் மின்சார துறையை சீரமைக்கும் தவெக அரசு.. இதை ஏன் 50 ஆண்டுகளில் திராவிட அரசுகள் செய்யவில்லை?
- அம்மா உணவகத்தை சரிசெஞ்சாச்சு.. அடுத்தது மழைநீர் சேமிப்பு திட்டம் தான்.. தவெக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?
- உங்களுக்கும் திமுக அரசுக்கும் என்ன வித்தியாசம்.. மாரிதாஸ் கைது குறித்து சவுக்கு சங்கர்...
கைதான மாரிதாசுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்.. தொடர்ந்து விமர்சனம் செய்வாரா?
பெண் அமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக, பிரபல யூடியூபர் மாரிதாஸ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த 42 வயதான மாரிதாஸ், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து 'எக்ஸ்' தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இழிவான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரைக்கு சென்று அவரது இல்லத்தில் வைத்து மாரிதாஸை கைது செய்தனர். தான் கைது செய்யப்பட உள்ள தகவலையும் மாரிதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
கைது செய்யப்பட்ட அவர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், மாரிதாஸை நிபந்தனை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார். ஏ.ஐ. தொழில்நுட்பத் தவறான பயன்பாடு மற்றும் சமூக வலைதள அவதூறுகள் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
Edited by Siva
