1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Reviving Jayalalithaa's Iconic Rainwater Harvesting Scheme: A Vital Task for the TVK Government

அம்மா உணவகத்தை சரிசெஞ்சாச்சு.. அடுத்தது மழைநீர் சேமிப்பு திட்டம் தான்.. தவெக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?

தமிழக வெற்றிக் கழகம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த அம்மா உணவகம் போன்றே, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய மற்றொரு உன்னத திட்டம் 'மழைநீர் சேகரிப்புத் திட்டம்' ஆகும். 
 
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டம், இன்று பெரும்பாலான இடங்களில் பெயரளவிற்கே கடைப்பிடிக்கப்படுகிறது; பல இடங்களில் அதுவும் இல்லை என்பதுதான் கசப்பான எதார்த்தம்.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களிலும் இத்திட்டம் முறையாகவும், கட்டாயமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்மட்டத்தை மிக விரைவாக உயர்த்த முடியும். தற்போதைய தவெக அரசு, அம்மா உணவகத்தை சரி செய்தது போல், தொலைநோக்குப் பார்வையுடன் மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கு உடனடியாகப் புத்துயிர் கொடுத்து, மாநிலம் முழுவதும் இதனைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்திட வேண்டும்.
 
 நீர் மேலாண்மையில் தவெக அரசு காட்டும் இந்த வேகம், தமிழகத்தின் வருங்காலத் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் மாற்று அரசியலின் முக்கிய அங்கமாக மாறும்.
 
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
ஒரே மாதத்தில் மின்சார துறையை சீரமைக்கும் தவெக அரசு.. இதை ஏன் 50 ஆண்டுகளில் திராவிட அரசுகள் செய்யவில்லை?