தொடர்புடைய செய்திகள்
- 5 கிலோ எடையுள்ள இலவச சிலிண்டர்.. மத்திய அரசு அறிவிப்பு.. பேச்சுலர்கள் நிம்மதி..!
- மாநிலங்களுக்கு 10 சதவீத எல்பிஜி கூடுதலாக ஒதுக்கீடு.. மத்திய அரசு அறிவிப்பு.. ஆனால் ஒரு கண்டிஷன்..!
- இனிமேல் உங்க இஷ்டத்திற்கு சிலிண்டர் வாங்க முடியாது.. கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு..!
- சிகரெட், பீடி விலை பலமடங்கு உயர்வு? பிப்ரவரி 1 முதல் புதிய வரி அமல்.. மத்திய அரசு..!
- ஒரே மாதத்தில் மின்சார துறையை சீரமைக்கும் தவெக அரசு.. இதை ஏன் 50 ஆண்டுகளில் திராவிட அரசுகள் செய்யவில்லை?
மானிய விலையில் இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே.. மத்திய அரசின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி...!
மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இனிவரும் காலங்களில், உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஒரு நிதியாண்டில் முதல் 4 சிலிண்டர்களை மட்டுமே மத்திய அரசின் மானிய விலையில் பெற முடியும். அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலையிலேயே முழுப் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த திடீர் மாற்றமானது, மானிய சுமையைக் குறைக்கவும், திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு கிராமப்புற மற்றும் ஏழை எளிய நுகர்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
