திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (09:18 IST)

பாடகர் KK மரணம்… இதயத்தில் இருந்த அடைப்புகள்… வெளியான மருத்துவர்களின் அறிக்கை

சமீபத்தில் மறைந்த பாடகர் கே கே வின் திடீர் மரணம் ரசிகர்களையும் திரை உலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல பாலிவுட் பாடகர் கே கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அஞ்சலிகளை செலுத்தினர்.

இந்நிலையில் தற்போது அவரின் இறப்புக்கான காரணம் பற்றிய மருத்துவர்களின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கே கேவின் இதயத்தில் இடது தமனியில் 80 சதவீத அளவுக்கு அடைப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர்த்து வேறு சில சிறு அடைப்புகளும் இருந்தது தெரியவந்துள்ளது. இவையே மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.