திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (07:41 IST)

பிரபல பாடகர் கே.கே. மரணம்: திரையுலகினர் இரங்கல்

singer kk
பிரபல பாடகர் கே.கே. மரணம்: திரையுலகினர் இரங்கல்
தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் பாடிய பிரபல பின்னணி பாடகர் கேகே என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53
 
பிரபல பாலிவுட் பாடகர் கே கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பாடகர் கே கே தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் ரகுமான் இசையில் காதல் தேசம் என்ற படத்தில் கல்லூரி சாலை என்ற பாடலின் மூலம் பிரபலமானார். அஜித் விஜய் தனுஷ் உள்பட பல படங்களுக்கு அவர் பாடியுள்ளார்