செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:08 IST)

சமூக வலைத்தளத்தில் பழகி பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞர் கைது!

சமூகவலைதளத்தில் பழகிய பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண் ஒருவரிடம் சமூக வலைதளம் மூலம் சுமன் என்ற இளைஞர் பழகினார்
 
 இதனை அடுத்து அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அந்த பெண் அசந்த நேரத்தில் அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடி உள்ளதாக தெரிகிறது
 
கொள்ளையடித்த பணத்தில் கார் வாங்கி சுமன் சொகுசாக வாழ்ந்ததையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது 
 
சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்ணின் வீட்டில் திருடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது