செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (08:54 IST)

விருந்து நிகழ்ச்சியில் இளைஞர்; அடித்துக் கொன்ற திருநங்கைகள்! – கர்நாடகாவில் அதிர்ச்சி!

கர்நாடகாவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளைஞரை திருநங்கைகள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம் பெங்களூரில் உள்ள சென்னபட்டணா பகுதியில் ஒரே வீட்டில் 5 திருநங்கைகள் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருநங்கைகள் தங்கள் வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மண்டியா பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரும் வந்துள்ளார். விருந்து நிகழ்ச்சியின்போது ஆனந்துக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் சண்டையாக முற்றிய நிலையில் திருநங்கைகள் ஆனந்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சென்னப்பட்டணா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.