1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (14:29 IST)

போட்டி போட்டு அதிவேகமாக கார் ஓட்டிய இளைஞர்கள்.. வீட்டு வாசலில் நின்றிருந்த பெண் பரிதாப பலி..!

Accident
சென்னையில் இரண்டு இளைஞர்கள் போட்டி போட்டு கார் ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் ஒரு கார் மோதி வீட்டு வாசலில் நின்றிருந்த பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருநீர்மலை பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக கார் ஓட்டி சென்றனர். அந்த கார்களில் ஒன்று வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அகிலா என்ற 43 வயது பெண் மீது மோதியதை அடுத்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதனை செய்த போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிகிறது.


விபத்தை ஏற்படுத்திய கார் அங்குள்ள பள்ளத்தில் சிக்கியதை அடுத்து காரை ஓட்டிய வந்தவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணையை செய்தபோது அவர் ஒரு தனியார் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.

அவரது பெயர் அஜ்மல் மற்றும் அவரும் அவருடைய நண்பரும் போட்டி போட்டுக் கொண்டு கார் ஓட்டியதால் இந்த விபரீத விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Edited by Mahendran