1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (17:26 IST)

பாம்பன் பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்: சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

பாம்பன் பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கடலுக்குள் குதிக்கும் வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ ஓன்று வெளியிடுவதற்காக, இளைஞர் ஒருவர் இராமேஸ்வரம் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் மேலிருந்து கடலுக்குள் குதித்துள்ளார்.
 
பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவற்றில் நின்றுகொண்டிருக்கும் அந்த இளைஞர் சக இளைஞர்கள் உற்சாகப்படுத்த, எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஆபத்தான முறையில் கடலுக்குள் குதித்துள்ளார்.
 
ஏற்கனவே ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் செல்பி எடுக்க சென்றபோது ரயில் மோதி பலத்த காயம் அடைந்தார்.
 
சமூகவலைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அதிக லைக்குகள் பெற இளைஞர்கள் இது போன்ற விபரீத சாகச முயற்சிகளை எடுக்கின்றனர்.