திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (17:43 IST)

போலி கணக்கு; வீடியோ வெளியிட்ட பாஜக; விளக்கம் கொடுத்த ரம்யா

நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான திவ்யா மோடி குறித்து கூறிய கருத்துக்கு பாஜகவினர் திவ்யா போலி கணக்கு உருவாக்க சொல்லும் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 
கர்நாடக மாநில தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமூக வலைதளத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளராக இருப்பதால் அதை அவர் கவணித்து வருகிறார். மோடி போதையில் பேசியதாக அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் திவ்யா காங்கிரஸ் கட்சி கூட்டம் ஒன்றில் தொடங்களிடம் ஃபேஸ்புக் கணக்கு குறித்து பேசிய வீடியோ ஒன்றை பாஜகவினர் வெளியிட்டு போலி கணக்குகளை உருவாக்க சொல்கிறார் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
 
இதற்கு திவ்யா விளக்க கொடுத்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது:-
 
இது போலியாக திரிக்கப்பட்ட வீடியோ. நான் போலி கணக்கு, பல கணக்கு மற்றும் அதிகாரப்பூர்வமான கணக்கு குறித்து விளக்கம் அளித்தேன். உங்களது சொந்த கருத்தை சொல்ல நினைத்தால் இன்னொரு கணக்கு உருவாக்குங்கள் என்று கூறினேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.