வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (16:32 IST)

குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை ஆர்.கே நகரில் குடிபோதையில் கழிவுநீர் கால்வாய் மதில் சுவர் மீது அமர்ந்து இருந்த நபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
ஆர்கேநகர் பகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மதில் சுவர் மீது அப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் வயது 25 மதுபோதையில் குடித்துவிட்டு சுவரின் மீது அமர்ந்துள்ளார் குடிபோதையில் நிலை தடுமாறி  கால்வாயில் விழுந்து விட்டார் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பந்து கால்வாயில் விழுந்து அதை எடுக்க வந்த நிலையில் கழிவுநீரில் இளைஞர் ஒருவர் மிதப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் உடன் அழைத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .
 
சம்பவ இடத்திற்கு வந்த ஆர்கே நகர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மதுபோதையில் மதில் சுவரின் மீது அமர்ந்து இருந்த நபர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.