திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூன் 2018 (14:00 IST)

காதலித்து ஏமாற்றியதால் கோபம் ; கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து : சென்னையில் அதிர்ச்சி

தன்னை காதலித்து கைவிட்டு விட்டு வேறொரு நபரை காதலித்ததால் கோபமடைந்த காதலன், கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த பிணு என்பவரின் மகன் கவியரசன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சரண்யா என்ற கல்லூரி மாணவியுடன்  அவருக்கு நட்பு ஏற்பட்டு, அதன் பின் அது காதலாக மாறியுள்ளது. எனவே சென்னையின் பல இடங்களுக்கும் அவர்கள் ஜோடியாக சுற்றியுள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கவியரசனிடம் பேசுவதை சரண்யா தவிர்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கவியரசன், சரண்யாவின் அன்றாட நடவடிக்கைகளை அவருக்கு தெரியாமல் கவனித்துள்ளார். அப்போது, அவர் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்து. அந்த மாணவர் மூலம் அவர்கள் இருவரும் காதலிப்பதை கவியரசன் தெரிந்து கொண்டார்.
 
எனவே, சரண்யாவை கத்திவாக்கம் ரயில் நிலையத்திற்கு வரவழைத்த கவியரசன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட கோபத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரண்யாவின் முகம், நெஞ்சு, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு என் உறவினர் பெண்ணை ஒருவன் கத்தியால் குத்தி செல்போனை பறித்து சென்று விட்டான் எனக் கூறிவிட்டு, மயங்கி கிடந்த சரண்யாவை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
 
ஆனால், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் பதிலளிக்க அவர்தான் குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். கவியரசனும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.