திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 ஜூன் 2018 (08:28 IST)

ஆஃபர் அறிவித்த துணிக்கடையை அடித்து நொறுக்கிய வியாபாரிகள்

திருப்பூரில் குறைந்த விலையில் துணிகளை விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து நொறுக்கினர்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர்  ஸ்ட்ரீட் டாக் என்ற பெயரில் புதிதாக துணிக்கடை ஒன்றை துவங்கினார். வாடிக்கையாளர்களைக் கவர நினைத்த அவர், திறப்பு விழாவை முன்னிட்டு அதிரடி சலுகைகளை அறிவித்தார். அதன்படி 250 ரூபாய் சட்டையை 50 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவித்தார். இதனால் அவரது கடையில் கூட்டம் அலைமோதியது.
 
இதனைப் பொறுக்க முடியாத மற்ற துணிக்கடை வியாபாரிகள், ஆனந்தின் துணிக்கடைக்குள் புகுந்து அவரது கடையை அடித்து நொறுக்கினர். போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.