செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:17 IST)

குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய இளைஞர்: மாணவி எடுத்த விபரீத முடிவு

கோவையில் இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 
 
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். அவர்கள் வசிக்கும் தெருவில் காய்கறி வியாபாரம் செய்யும் இளைஞர் ஒருவர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், மாணவியோ காதலை ஏற்கவில்லை. 
 
இதனால் மாணவி குளிக்கும் போது வீடியோ எடுத்து அதனை காட்டி மிரட்டி தன்னை காதலிக்க கோரியும் தன் ஆசைக்கு இணங்க கோரியும் வற்புறுத்தியுள்ளான். இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 
 
இந்த விஷயம் மாணவியின் உறவினர்களுக்கு தெரிய வர காவல் நிலையத்தி புகார் அளிக்கப்பட்டு தற்கொலைக்குத் துாண்டியதாக வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.