வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (17:32 IST)

நீங்கள் தான் உண்மையான சாம்பியன்.! வினேஷ் போகத்தை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்..!!

Stalin
வினேஷ், நீங்கள் 'ஒவ்வொரு வகையிலும்' உண்மையான சாம்பியன் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற 140 கோடி மக்களின் கனவு 100 கிராம் எடையில் தகர்ந்து போனது. 
 
வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வினேஷ், நீங்கள் 'ஒவ்வொரு வகையிலும்' உண்மையான சாம்பியன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
உங்கள் பின்னடைவு, வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 
சில கிராமுக்கு மேல் தகுதியிழப்பு உங்கள் மனதையும் சாதனைகளையும் குறைக்க முடியாது என்றும் நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.