Daily Horoscope
✕

மேகதாது அணை விவகாரம் - எடியூரப்பா உருவ பொம்மை எரித்து போராட்டம் !!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 13 ஜூலை 2021 (11:58 IST)
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து மன்னார்குடியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. 
 
இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுத்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து மன்னார்குடியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எடியூரப்பாவை கண்டித்து மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

சென்னையில் வானிலை ரேடாரில் தொழில்நுட்ப கோளாறு: மழை நிலவரத்தை கணிப்பதில் சிக்கல்!

குக் வித் கோமாளி புகழ் செஃப் தாமு காலமானார்: சமையல் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு!

சென்னையில் ரூ.30-க்கு சன்னரக அரிசி எங்கெங்கே கிடைக்கும்.. கடைகள் மற்றும் தொடர்பு எண்களை அறிவித்தது கூட்டுறவுத்துறை!

'அர்னாப்' புயல் கரையை கடப்பது எங்கே? எப்போது? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: திருமண முன்பணம் ரூ.5 லட்சம் பெறுவதற்கான புதிய அரசாணை வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments