வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (11:01 IST)

மேகதாது அணை விவகாரம் - மத்திய நீர்வள அமைச்சருடன் எடியூரப்பா சந்திப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு. 

 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
 
இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்று தமிழக அனைத்து கட்சி கூட்டம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, 
 
1. கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
2. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
3. அணை கட்டுவதற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனைத்து கட்சிகளும் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு நடத்த உள்ளார். பெங்களூருவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.