ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (22:30 IST)

4 விடைகளும் தவறானவை: குரூப் 4 தேர்வில் நடந்த குழப்பம்

தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் இன்று நடத்திய குருப் 4 தேர்வை 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 போ் எழுதினர். வெறும் 9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்காக இந்த தேர்வு இன்று தமிழகம்  முழுவதும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய தேர்வில் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கான 4 விடைகளில் ஒன்று கூட சரியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாகூர் பிறந்தது 1861-ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதியாகும். ஆனால் தேர்வுத்தாளில் கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளிலும் இந்த சரியான பதில் இடம்பெறவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து தமிழக அரசு தேர்வானையம் விளக்கமளித்தபோது, 'குரூப் 4 தேர்வு விடைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம் என்றும், உத்தேச விடை வெளியான பிறகு 7 நாட்களுக்குள் அதில் தவறேதும் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.