1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (21:00 IST)

தமிழக சட்டசபையில் யார் யார் படங்கள் உள்ளது தெரியுமா?

தமிழக சட்டசபையில் யார் யார் படங்கள் உள்ளது தெரியுமா?
தமிழக சட்டமன்றத்தில் நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்படவுள்ளது. நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் வைத்து சட்டமன்றத்தின் மாண்பினை களங்கப்படுத்த வேண்டாம் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்த படத்திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இதுவரை தமிழக சட்டமன்றத்தில் யார் யார் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போமா!

தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர் காயிதேமில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய பத்து பேரின் படங்கள் இதுவரை வைக்கப்பட்டு உள்ளன. நாளை ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டால் அந்த புகைப்படம் பதினொறாவது புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.