செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (08:57 IST)

இன்று சர்வதேச மகளிர் தினம்: வைரமுத்து வாழ்த்து!

இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து பிரபல பாடலாசிரியர் வைரமுத்து கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: 
 
கடவுளாக்கி
ஒதுக்குவதுமில்லை
அடிமையாக்கி
அடக்குவதுமில்லை
 
சில நேரங்களில்
ஆணினும் மேலானவள்
மற்றபடி நிகரானவள்
 
உன் தியாகத்தை -
திண்மையை -
கற்றுக்கொள்ளாமலே
கழிகிறது ஆண்கூட்டம்
 
நீ இல்லையேல்
ஈர்ப்புமில்லை;
காப்புமில்லை
 
எப்போதும்போல்
மகளிர் தினத்திலும்
மதிக்கிறேன் பெண்ணே!