1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:34 IST)

பள்ளிகளை மூடுவது நியாயமில்லை: உலக வங்கி கல்வி இயக்குனர் தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளை மூடுவது நியாயமில்லை என உலக வங்கி உலக வங்கி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்கள் பெரியவர்களை தான் அதிகம் தாக்கும் என்றும் குழந்தைகளை தாக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் எனவே அனைத்து நாடுகளின் அரசுகளும் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
பள்ளிகளை மூடுவது நியாயமே இல்லை என்றும் ஆன்லைன் மூலம் படிக்கும் படிப்பு குழந்தைகளின் மனதில் தாங்காது என்றும் பள்ளிகளை தாராளமாக தடுக்கலாம் என்றும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்/ உலக வங்கி கல்வி இயக்குனரின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது