செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:30 IST)

ஜனவரி 19 முதல் 10-12ஆம் மாணவர்களுக்கு நேரடி வகுப்பா? ஆன்லைன் வகுப்பா?

ஜனவரி 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தது
 
இதனை அடுத்து பொங்கல் விடுமுறைக்கு பின் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் சற்று முன்னர் பள்ளி கல்வித்துறை இயக்குனர் நந்தகோபால் அவர்கள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.