வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (08:13 IST)

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் உண்டு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் உண்டு என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மற்றும் நேரடி வகுப்புகள் இயங்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கிடையாது என்றும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது