செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (20:41 IST)

நிரந்தரமா வேலை செய்யணும்னா அட்ஜஸ்ட் பண்ணு.. பெண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்

கோவை குனியமுத்தூர் 88-வது வார்டு பெண் தூய்மை பணியாளர்களுக்கு
பாலியல் தொல்லை கொடுத்தால் வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர்.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர் கூறுகையில்:-
 
கடந்த ஒரு வருடங்களாக தூய்மை பணியாளராக 88-வது வார்டில் பணிபுரிந்து வருவதாகவும் பணி நிரந்தரம் செய்வதற்காக அதிகாரிகள் பணம் கட்ட சொல்லுகிறார்க பணம் தர மறுத்தால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் துன்புறுத்தி வருவதாக தூய்மை பணியாளர்கள் வேதனையை தெரிவித்தனர்.
 
அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாவிட்டால் அடுத்த வார்டுக்கு பணியை மாற்றி விட்டு துன்புறுத்தி வருவதாகவும் அடுத்த வாரத்தில் இருக்கும் நபர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்தனர்.
 
மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் உதயகுமார் மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் பணிக்கு வந்தால் பணிக்கு வரவில்லை என்று பொய்யாக குற்றம் சுமத்தி அவர்களின் சம்பள பணத்தை பிடித்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
 
மேலும் உதயகுமாரின் சித்தப்பா வேலுச்சாமி செய்வினை செய்து விடுவதாக தூய்மை பணியாளர் மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.
 
 மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு உதயகுமார் வேலுச்சாமி என 4 பேரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.