கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண் வெளியேற்றம்: கோவையில் பரபரப்பு!
கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண் வெளியேற்றம்
கோவை அருகே திமுக தலைவர் முக ஸ்டாலின் நடத்திய கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் கேள்வி கேட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களாக பல்வேறு ஊர்களில் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். அவ்வாறு கோவை மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் என்ற பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்
இந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசுவது துவங்கும் முன் பெண் ஒருவர் எழுந்து இந்த ஊரின் பெயர் என்ன எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முக ஸ்டாலின் கூறிய சர்ச்சைக்குரிய பதிலால் அந்த பெண் ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா? என அப்பெண் பதில் கேள்வி கேட்டார்
இந்தப் பெண்ணின் கேள்வியால் அந்த கிராமசபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் அந்த பெண்ணை வெளியேறியதாக தெரிகிறது. கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் ஒருவரை திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையிலேயே வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது