செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:55 IST)

பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் பணிக்குறைப்பு: கவர்னர் அறிவிப்பு..!

புதுவையில் பெண் அரசு பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரண்டு மணி நேரம் நேர சலுகை வழங்கப்படும் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு வீட்டில் அதிக வேலை இருக்கும் என்பதால் அலுவலகத்திற்கு வருவதற்கு தாமதமாகும் நிலை ஏற்படும் என்று இதனை கணக்கில் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் காலை பெண்கள் அலுவலகத்திற்கு வருவதில் சலுகை வழங்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிவித்தார். 
 
இதனை ஏற்றுக் கொண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி அதற்கான கோப்புகளில் இன்று கையெழுத்து விட்டார். இதனை அடுத்து புதுவை அரசு பெண் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 9 மணிக்கு பதிலாக 11 மணிக்கு அலுவலகத்துக்கு வரலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
பெண்களின் வேண்டுகோளை ஏற்று இந்த கோப்புகளில் கையெழுத்திட்ட முதல்வர் ரங்கசாமிக்கு தனது நன்றி என கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சலுகையை தமிழக அரசின் பெண் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
 
Edited by Siva