1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 40 bihar women get one husband?

40 பெண்களுக்கு ஒரே கணவர்...! ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி உண்மை..!

பெண்கள்
பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த கணக்கெடுப்பின்போது 40 பெண்களுக்கு ஒரே கணவர் என்ற தகவல் அரசு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொருளாதாரம் மற்றும் சமூக பின்னணியை அறிந்து அதற்கேற்ற வளர்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதற்காக பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரித்து வருகின்றார் 
 
இந்த நிலையில் பீகாரில் உள்ள அர்வாலி என்ற பகுதியில் 40 பெண்களுக்கு ஒரே கணவர் என பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் தான் விபச்சார விடுதிகள் உள்ளது என்பதும் பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் இங்கு வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்தபோது பாலியல் தொழில் செய்யும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மற்றும் தங்களுக்கு ஒரு கணவர் கணவர் என ஒரு கற்பனை பெயரை வைத்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க ‘பிளாக் மெயில்’ கும்பல் முயற்சி: அமைச்சர் பிடிஆர் விளக்கம்