வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:06 IST)

மகன் மீது காதல்…தந்தையுடன் ஓடிய இளம்பெண்…

love affair
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வாலிபரைக் காதலித்து வந்த இளம்பெண் அந்த வாலிபரின் தந்தையுடன் ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் கமலேஷ்குமார். இவரது மகன் அமித்(20). இவர்கள் இருவரும் கான்பூரில் உள்ள கட்டிட தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, ஒரு இளம்பெண்ணுடன் அமித்திற்குப் பழக்கம் ஏற்பட்டு காதல் உண்டானது.  இளம்பெண் அடிக்கடி அமித்தின் வீட்டிற்குச் சென்றபோது, அமித்தின் தந்தை கமலேஷ்குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இளம்பெண்ணும், கமலேஷையும் காணவில்லை.

இதையடுத்து அப்பெண்ணின் சகோதரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார்,  இருவரையும் கண்டுபிடித்து கைது செய்தனர். கமலேஷ், இளம்பெண் தற்போது  ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், காதலித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கமலேஷுக்கு போலீஸ் காவலில் சிறறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,  இளம்பெண் அவருடன்தான் வாழவிரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.