மாற்றுத் திறனாளிப் பெண்ணை ஏமாற்றிய காதலன் – கைக்குழந்தையுடன் அவர் எடுத்த முடிவு !
தன்னைக் காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள வீரபெருமாள்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் தீனா. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு சாதியைச் சேர்ந்த அய்யப்பன் எனும் இளைஞருகும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அவர்களின் நெருக்கத்தால் தீனா சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த அய்யப்பன் அவரை விட்டு விலக ஆரம்பித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தீனா அய்யப்பன் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தி காவல்துறையில் புகாரும் கொடுத்துள்ளார். ஆனால் அய்யப்பனுக்கு காவல் துறையில் ஆட்கள் இருந்ததால் அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தீனாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறக்கவே தனது குழந்தையோடு அய்யப்பன் வீட்டின் முன் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். அவருடன் அவரது உறவினர்களும் ஊர்க்காரர்களும் தர்ணாவில் இறங்கியுள்ளனர்.
இம்முறை இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகவே போலிஸார் வந்து தீனாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதையறிந்த அய்யப்பன் தலைமறைவாகியுள்ளார்.