ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (12:06 IST)

எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தியை மணக்கும் முரளியின் மகன் – காதலால் இணைந்த குடும்பங்கள் !

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் தங்கையின் பேத்தியை நடிகர் முரளியின் இளைய மகள் மணக்க இருக்கிறார்.

மறைந்த பிரபல தமிழ் நடிகர் முரளி முரளியின் மூத்த மகன் அதர்வா தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி நடித்து வருகிறார். அவரின் இளையமகன் ஆகாஷ் சிங்கப்பூரில் எம்.பி.ஏ படிப்பை முடித்துள்ளார். இவர் நடிகர் விஜய்யின் அத்தையின் பேத்தியை திருமணம் விரைவில்  செய்து கொள்ள உள்ளார்.

இயக்குனர் எஸ்.ஏ.சியின் தங்கை மகளான விமலா என்பவரின் மகளான சினேகா என்பவர் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இவரும்  ஆகாஷும் சிங்கப்பூரில் படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவரும் தங்கள் குடும்பத்தை சம்மதிக்க வைத்து திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இருவருக்குமான நிச்சயதார்த்தம் டிசம்பர் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது.