வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (08:57 IST)

16 வயது சிறுமி கர்ப்பம்… காரணம் 19 வயது மாணவன் – அதிர்ச்சியில் பெற்றோர் !

மயிலாடுதுறையில் 16 வயது சிறுமி ஒருவரின் கர்ப்பத்துக்கு காரண்மான 19 வயது இளைஞன் போக்சோ கைது செய்யப்ப்ட்டுள்ளார்.

மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜ்.19 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் நெருக்கத்தால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து இந்த விஷயத்தை அறிந்த அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதன் பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் அந்த மாணவன் மீது புகார் அளிக்க அவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வயது வேகத்தால் நடந்த தவறால் அந்த சிறுமியும் மாணவனும் தங்கள் எதிர்காலத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.