வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:14 IST)

பிஸ்கட்டுக்குள் கஞ்சா… சிறையில் இருக்கும் உறவினருக்கு நூதனமாக எடுத்துச் சென்ற பெண்!

சென்னை அருகே உள்ள கரையான் சாவடி கிளைச்சிறையில் இருக்கும் நபருக்கு அவரின் உறவினர் பெண் ஒருவர் கஞ்சா எடுத்துச் சென்று கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள பூவிருந்தவல்லி அடுத்த கரையான்சாவடியில் தனி கிளை சிறை ஒன்று உள்ளது. அங்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க அவரின் உறவுக்கார பெண் என்று சொல்லி வளர்மதி என்பவர் வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக்கு கொடுக்க, பழங்கள் மற்றும் பிஸ்கெட் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளார்.

அதைப் போலிஸார் சோதனை செய்த போது பிஸ்கட்களின் நடுவில் கஞ்சாவை ஒளித்து வைத்து அவர் எடுத்து வந்ததை போலிஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் வளர்மதி பூவிருந்தவல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த பிஸ்கட் பாக்கெட்டுக்குள் 50 கிராம் கஞ்சா எடுத்து வந்ததாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.