ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (11:29 IST)

என் கணவர் கஞ்சா புகைத்து இறந்தாரா..? இயக்குனரை மன்னிப்பு கேட்க வைத்த மேக்னா ராஜ்!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி  சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இவர் கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இந்நிலையில் மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், தற்ப்போது அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கன்னட திரையுலகில் நடக்கும் பார்ட்டிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாக கூறி டிவி நடிகை அனிகா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் இந்திரஜித் லங்கேஜ்,  இறந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சர்ச்சை கிளப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவியின் மனைவி மேகனா ராஜ் இயக்குனர் இந்திரஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். உடனே இந்திரஜித் , சிரஞ்சீவி போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாக நான் சொல்லவில்லை என அந்தர்பல்டி அடித்து மேக்னாவிடம் மன்னிப்பு கேட்டார்.