வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (17:10 IST)

வேஃபர் பிஸ்கட் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் பலி… ஆலையில் சோதனை!

தெலங்கானாவில் வேஃபர் பிஸ்கட்டுகளை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், திங்கள் கிழமையன்று இரண்டு குழந்தைகள் புகழ்பெற்ற வேஃபர் பிஸ்கட்களை சாப்பிட்டதும் உயிரிழந்தனர். இது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட வேஃபர் பிஸ்கட் நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

அங்கிருந்த மூலப் பொருட்களின் மாதிரிகளை சோதனைக்காக எடுத்து வந்துள்ளனர். அதுபோலவே குழந்தைகள் சாப்பிட்ட பிஸ்கட் மாதிரிகளையும் சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதை வைத்து ஆய்வு நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. பிஸ்கெட் தயாரிப்பு ஆலையில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.