1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (17:10 IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பேருந்திற்கு தீ வைப்பு - பெண் பலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சுட்டை கண்டித்து கடந்த 25ம் தேதி அரசு பேருந்துக்கு தீ வைத்த விவகாரத்தில், பலத்த காயமடைந்த ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

 
கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த 25ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் பேருந்தில் வந்த திருவைகுண்டம் அருகே உள்ள மெய்ஞான புரத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்கிற பெண் படுகாயத்துடன்   பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் சிகிச்சை  பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார்.