திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (12:41 IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: உயிரிழந்தவர்களுக்கு மறுபிரேத பரிசோதனை தொடங்கியது

தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டில் உயரிழந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை தொடங்கியது.
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பொதுமக்கள் பேரணியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 
இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தோ, செய்யாமலோ பதப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் இந்த 7 பேரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. இதில் ஜிப்மர் மருத்துவர் உள்பட 3 மருத்துவர் கூழு மறுபிரேத பரிசோதனையை செய்கின்றனர். இந்த பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவும் உள்ளனர்