1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (10:23 IST)

ரஜினியின் குரல் யாருடையது? - மு.க.ஸ்டாலின் விளாசல்

தூத்துக்குடி போராட்டம் குறித்த ரஜினியின் குரல் அவருடையதுதானா  என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் பேசினார். 
 
ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருமே சமூக விரோதிகள் என ரஜினி கூறியதாகவும், போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், இணையதளத்தில் ரஜினி கடும் விமரசனத்திற்கு ஆளாகியுள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் “தூத்துக்குடி போராட்டத்தில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் ஊடுறுவினார்கள் என்றும், அதுபற்றி தனக்கு தெரியும் என ரஜினி பேசியிருக்கிறார். எனவே, அவர்கள் யார் என்பதை ரஜினி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல், தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் என்ன கருத்துகளை கூறினார்களோ அதையே ரஜினியும் பிரதிபலித்துள்ளார். எனவே அவரின் குரல் அதிமுகவினுடையதா? இல்லை பாஜகவா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது” என ஸ்டாலின் கூறினார்.