திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (17:58 IST)

50 ரூபாய்க்கு அடித்துக்கொண்ட குடிகாரர்கள் – விலக்கிவிட சென்ற பெண் பலி!

திருச்சியில் அடித்துக்கொண்ட இருவரை பிரித்து சமாதானம் செய்ய போன பெண் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தில்லைநகர் தூக்குமேடை தெருவை சேர்ந்தவர்களான மாரிமுத்து மற்றும் தங்கபாண்டி ஆகிய இருவரும் மதுபோதையில் நேற்றிரவு அடித்துக் கொண்டுள்ளனர். அவர்களின் சண்டைக்கு காரணம் 50 ரூபாய்தான் என சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரையும் விலக்கிவிட தங்கப்பாண்டியின் உறவினர்களான சுரேஷ், அஞ்சலி, முத்துலட்சுமி ஆகியோர் முயற்சி செய்துள்ளனர்.

அப்போது குடிகாரர்கள் இருவரும் சேர்ந்து தள்ளிவிட்டதில் முத்துலட்சுமி கீழே விழுந்து அவர் தலையில் அடிபட்டுள்ளது. இதனால் காதிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்துள்ளது. இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவமானது முத்துலெட்சுமியின் குடும்பத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.