தொடர்புடைய செய்திகள்
- தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?
- முதல்முறையாக ரூ.68,000ஐ தாண்டியது தங்கம் விலை.. விரைவில் ரூ.1 லட்சம் எட்டுமா?
- கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!
- விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!
- ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!
ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 400 ரூபாயும், ஒரு கிராமுக்கு 50 ரூபாயும் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இதே ரீதியில் உயர்ந்தால், ஒரு சவரன் 70 ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்டும் என்று கூறப்படுவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் போலவே, வெள்ளியும் உயர்ந்து, ஒரு கிலோவுக்கு ரூ. 2000 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,560 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 68,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,338 எனவும் ஒரு சவரன் ரூபாய் 74,704 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
