திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (17:58 IST)

’தோசை ஆறிவிடும் ‘என நச்சரித்த அம்மா –துப்பாக்கியை எடுத்து சுட்ட மகன்!

பீகார் மாநிலத்தில் ஆசையாக தோசை சுட்டு எடுத்துக்கொண்டு வந்து சாப்பிட சொன்ன அம்மாவை மகன் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் மஞ்சுதேவி. இவருக்கு 20 வயதில் யாதவ் என்ற மகன் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் மஞ்சுதேவி இரவு உணவாக தோசை சுட்டு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த தன் மகனிடம் சாப்பிட சொல்லி கொடுத்துள்ளார். ஆனால் போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த யாதவ் தோசையை வைத்துவிட்டு போக சொல்லியுள்ளார்.

ஆனால் மஞ்சுதேவியோ தோசை ஆறிக்கொண்டு இருக்கிறது என மீண்டும் மீண்டும் சொன்னதால் கோபமான யாதவ் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து மஞ்சுதேவியை சுட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் சேர்த்துள்ளனர். இப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிந்துள்ள போலீஸார் அவரிடம் இருந்த துப்பாக்கியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.