1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (15:40 IST)

மு.க ஸ்டாலின் பிண அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன் – ராஜேந்திர பாலாஜி

தமிழக பால்வளத்துறை  அமைச்சர்  ராஜேந்திரன் பாலாஜி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், எங்கேயோ காணாமல்போன அண்டாவை கண்டுபிடிக்கும் துப்பறிவாளர் மாதிரி, மேக்கப் எல்லாம் போட்டு, கையை காலை ஆட்டி, பின்னணி இசையோட நாடகபாணியில் வீடியோவில் வாய்க்குவந்ததை உளறும் திமுக தலைவர்
@mkstalin
-ன் கேடுகெட்ட பிணஅரசியலை வன்மையாக கண்டிக்கிறேன். விச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும் அறிக்கைகளை வாசித்து கொரோனா காலத்திலும் இடைவிடாது படப்பிடிப்பு அரசியல் நடத்தும் முக.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்தெல்லாம் சவுடால் பேசலாமா? என்று விமர்சித்துள்ளார்.