வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (17:02 IST)

லஞ்சம் தராததால் ஆத்திரம்.. அரசு ஊழியர் செய்த அட்டூழியம்!

ரூ.100 லஞ்சம் கொடுக்காததால் நகராட்சி ஊழியர் ஒருவர் 14 வயது சிறுவன் விற்பனைக்காக வைத்திருந்த முட்டைகளை வெறித்தனமாக கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள மக்கள் கொரொனாவால் பெரும் வாழ்வாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இருப்பதை வைத்துப் பிழைத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,  உத்தரப்பிரதே மாநிலத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தன் பெற்றோர்க்கு ஆதரவாய் முட்டை விற்பனை செய்து வந்துள்ளான்.

இன்று அவனிடம் ஒரு நகராட்சி ஊ`ழியர் ரூ.100 லஞ்சம் கேட்டுள்ளார். தற்போதைய லாக் டவுன் சூழ்நிலையைக் கூறி சிறுவன்பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அரசு  ஊழியர் சிறுவனின் தள்ளுவண்டியில் வைத்திருந்த முட்டைகளை தள்ளிவிட்டார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில், வைரலாகி வருகிறது.