1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (10:00 IST)

உடல் கருகி உயிரிழந்த மகன்கள்: ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!

தனது இரண்டு குழந்தைகள் மரணித்ததால் தாயும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் பட்டாசு கடையில் கடந்த 18ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி கடையின் உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 5 வயது பேரக்குழந்தை தேஜஸ், 8 வயது பேரக்குழந்தை தனுஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 
 
இச்சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமே மறையாத நிலையில், கடந்த 2 நாட்களாக வேதனையில் தவித்து வந்த குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி, இன்று அதிகாலை லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.