யாருடன் கூட்டணி! இதோ சொல்லிவிட்டாருல கமல்...

kamal
vm| Last Modified ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (11:47 IST)
நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிட  உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், கூட்டணி தொடர்பாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் 'நான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளேன். பிற வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஒத்த கருத்து உடையவர்கள் மட்டுமே எங்களுடன் கூட்டணி அமைக்க முடியும்' என்றார் . 
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நெல்லையில் நடக்கிறது இன்றைய கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை கமல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..


இதில் மேலும் படிக்கவும் :