செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (15:03 IST)

இந்த கோட்டை தாண்டி வந்தா… - கோடு போட்டு தாண்டும் குடிமகன்கள்!

கேரள மாநிலத்தில் மதுக்கடைகளில் வாங்க வருபவர்கள் இடைவெளி விட்டு நிற்பது போல தமிழகத்திலும் கட்டம் கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து வரும் கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் இடைவெளியை காக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் மதுக்கடைகளில் மது வாங்க வருபவர்கள் வரிசையில் நிற்கவும், வரிசைக்கு இடையே போதிய இடைவெளியை நீடிக்கவும் செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்திலும் அதே முறை நடைமுறைக்கு வந்துள்ளது. போதிய இடைவெளிகளில் வரிசையாக கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு கட்டத்திலிருப்பவர் அடுத்த கட்டம் நகர்ந்ததும், பின்னால் இருப்பவர் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது விரும்பிகள் நீண்ட நேரம் பல கட்ட தாண்டல்களுக்கு பிறகு மதுவை வாங்கி செல்கின்றனர். சமூக இடைவெளியை பேண மதுக்கடைகளில் செயல்படுத்தியுள்ள இந்த நடைமுறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.